பக்கம்:குப்பைமேடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ராசி கொண்டு மனிதனின் ஆற்றலையும தன்னம்பிக்கைகளை யும் மதப்பிரசாரங்கள் குலைக்கின்றன என்பது அவள் வாதம். இந்த வாதங்களில் அவள் பிடிவாதம் காட்டி னாள்; என் போக்கில் என்னை விடு என்று வற்புறுத்தினேன் அவள் தன் போக்கில் தாய் வீடு சேர்ந்தான். -7 மறுபடியும் சாத்தான் வேதத்தை ஒத ஆரம் பித்தது. 'குப்பைத் தொட்டியை என் வீட்டு முன்னால் ஏன் போட வேண்டும்?' என்று தொடங்கினார். "உங்கள் குப்பையைக் கொட்ட' என்றேன். 'எதிர் வீடு, பக்கத்து வீடு மற்ற எல்லாரும் இங்கே போடுகிறார்களே, அதனால் என் வீடு குப்பை மேடு ஆகிறதே என்றார். 'ஏதாவது ஒரு வீடு அதற்குத்தேவை; உங்கள் வீடு அதற்குப்பிடித்து இருக்கிறது' என்றேன். 'குப்பைத் தொட்டி வீட்டுக்கு முன்னால் இருந்தால் லட்சுமி எப்படி வருவாள்' என்று கேட்டார். 'இந்த வீடு சுத்தமாக இருக்கும் என்று நம்பி வருவாள்; கதவைத் திறந்து வையுங்கள்' என்றேன். "திறக்காமலேயே மூடி வைத்திருந்தாலும் கொள்ளை யர்கள் வருவார்கள்' என்றார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/32&oldid=806305" இலிருந்து மீள்விக்கப்பட்டது