பக்கம்:குப்பைமேடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

31

இதற்கும் தெருக்குப்பைத் தொடடிக்கும் தொடர்பு இல்லையே' என்றேன்.

"இந்தத் தாள் பொறுக்க வருகிற ஆள் இவர்களை நம்ப முடியாது. அவர்கள் பகலில் நோட்டம் பார்ப்பார் கள்; இரவில் தோட்டம் வழியாகத் திருடுபவர்க்கு வழி காட்டுவார்கள்' என்றார்.

எனக்கே அவரைக்கேட்க வேண்டும் என்று இருந்தேன். அதைக் கேட்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

'ஏன் சார்; உங்க பையனுக்கு ஏன் கலியாணம் செய்ய வில்லை' என்றேன்.

சாதகம் பொருந்தவில்லை' என்றார். அவருடைய. சுரம் சற்று இறங்கிய, "கிறித்தவர் நீர், நீங்கள் கூட சாதகம் பார்க்கிறீர்களா' என்றேன்.

'இந்த நாட்டில் கலாச்சாரங்கள் கலக்காமல் இல்லை’ இராகு காலம் எமகண்டம் இதெல்லாம் கூட நான் பார்ப் பது உண்டு, ஒரு மதத்தின் தாக்கம் மற்றவருக்கு ஏற்படு வதைத் தடுக்கமுடியாது. எனக்குக் கம்பராமாயணத்தில் ஈடுபாடு உண்டு. இந்தக் காவிய நாயகன் இராமனை உயர்ந்த மனிதனாக மதிக்கிறேன். கண்ணனின் கதையைப் படிப்பது உண்டு.

இராமன் ஏகபத்தினி விரதன், அதனால் அவனைப் பிடித்து இருக்கிறது என்றார். அவரைக் கண்டு பரிதாபப்

பட்டேன்.

'கலாச்சாரத் தாக்குதலை யாரும் தவிர்க்க முடியாது' என்று கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/33&oldid=1113002" இலிருந்து மீள்விக்கப்பட்டது