பக்கம்:குப்பைமேடு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

ராசீ

'யார் இருந்தும் எனக்கு ஆதரவு இல்லை, இனி நான் நடைப்பிணம்' என்றார். "பிணமும் நடக்கும்' என்பது அவர் சொல்லத் தெரிந்து கொண்டேன்.

"என்ன சார்! உங்களுக்கு என்ன குறை?" என்றேன்,

'இந்தக் காலத்துக்குத் தான் என் சுந்தரி எனக்குத் தேவை என்றார். அந்த அம்மையார் பெயர் சுந்தரி என் பதை அவர் கூறினார்.

'என் மனைவி இறந்தமைக்குக் கவலைப்படவில்லை' என்றார், வியப்பைத்தந்தது; விளக்கம் தந்தார்.

'மனைவி என்பது ஒரு அத்தியாயம்; துணைவி என்ப தும் அதோடு அடங்கலாம் 'தோழமை' என்ற ஒரு சொல் இப்போதுதான் உதயமாகிறது. 'உடம்பு' என்பது மறைந்துவிடுகிறது. எங்கள் நினைவுகள் உணர்வுகள் சார்புகள் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்கும் காலம் இது அவளுக்கு நான் துணை; எனக்கு அவள் துணை. இந்தத் தோழமை இழந்து ஏழமை பெற்றுள்ளேன்" என்றார்.

"சோறு போட ஆள் இருக்கிறார்கள்; சோர்வு அகற்ற அவளைத் தவிர வேறு யாரும் ஈடு செய்ய முடியாது' என்றார் .

இருவேறு உலகத்து இயற்கை. இவர் ஒரு வகை, அவர் ஒரு வகை என்பது ஒப்பிட்டுக் காணமுடிந்தது.

-9

இந்த எதிர் வீட்டுக்காரர் தொடர்ந்து என்னை நாடி வந்து கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/38&oldid=1113013" இலிருந்து மீள்விக்கப்பட்டது