பக்கம்:குப்பைமேடு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

ராசீ

வாய்ப்பு அது அளிக்கிறது. அவர்கள் அங்கே உட்கார்ந்து அவர்கள் ஏற்கனவே செய்து வைத்த பிழைகளையும் அச்சுக் கோப்பவரின் கை நடுக்கத்தையும் திருத்திக் கொண்டு இருப்பார்கள்.

இயந்திரம் ஒடிக் கொண்டே இருக்கும்போது கூட சிறுபிழை ஏற்பட்டு விடும்; நூல் அச்சடித்த பின்னர் அதைப்பார்த்துக் கண்ணிர் விட்டுக் கொண்டிருக்கக் கூடாது என்று அச்சகர் அடிக்கடி கூறுவார். அதற்கு முன்னால் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அதற்குப் பிறகு ஐயோ இப்படி வந்துவிட்டதே என்று கவலைப் படக்கூடாது என்பார். பிழைதிருத்தம் போட்டு நாமும் நம் பிழைகளைச் சுட்டுவது பெருந்தன்மையாக இருக்க லாம். ஆனால் நூலின் அழகுத் தன்மை கெட்டுவிடும். சோறு ஆக்குவதற்கு அரிசியில் கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சோறு சமைத்தபின் சமைத்தவர்கள் கை வைக்கக்கூடாது, படிக்கிறவர்கள் அவர்கள் கல்லை எடுத்துப்போட்டுச் சாப்பிடுவார்கள், அது அவர்களுக்கு விட்டுவிடுவது தான் நல்லது என்று அனுபவ அறிவு தருவார்.

எதிர்பாராத சந்திப்பு ஒரு சக எழுத்தாளரோடு அங்கு எனக்கு ஏற்பட்டது. அதுவே எங்கள் காதலுக்குக் கால் கோள் ஆகியது.

என் தற்கால வீட்டுக்காரி இதற்குமுன் கவிதை நூல் அங்கு அச்சிட்டுக் கொண்டிருந்தாள், இதற்குமுன் டி.வி. யில் கவியரங்கில் பார்த்திருக்கிறேன். அழுது வடிந்த முகமாக இருக்கும்; நேரில் பார்த்த பிறகு என் அபிப்பிரா யத்தை அவள் மாற்றிக் கொள்ளச் செய்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/44&oldid=1113133" இலிருந்து மீள்விக்கப்பட்டது