பக்கம்:குப்பைமேடு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

45

'அது எது? என்றேன். 'வாழும் இருவருக்குத்தேவைமன இயைபு' என்றாள்.

'அவர் தொழில் முதலாளியின் காலில் பிறந்த நாளில் சென்று விழுகிறார். என்னையும் விழச் சொல்கிறார், இங்கேதான் மாறுபட்டோம்' என்றாள்.

'இது இந்த நாட்டில் ஏற்பட்ட தவறான பழக்கம், கோயிலில் தெய்வத்தை வணங்குகிறார்கள். அந்தப் பழக்கம் இங்கும் வந்துவிட்டது, மதிப்பது வேறு; தலை குணிவது வேறு; அதுவும் கால் தொட்டு வெட்கமில்லாமல் விழுகிறார்கள். அது என்னால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. தன்மானம் இல்லாத வாழ்க்கை எனக்கு அவ மானமாகப்பட்டது' என்றாள்.

அவள் ஒரு நெருப்பு என்பதை அறிந்தேன். அவள்பால் என் விருப்பு தொடர்ந்தது. அவள் சட்டியில் சோறு சமைத்து வைத்தாள்; அதை வயிறார உண்டேன்; வாதங்கள் வைத்துக்கொண்டால் அது பேதங்களை வளர்க்கும். அதனால் நான் மிதவாதியாக மாறினேன். அபரிமிதமான நன்மைகள் கிடைத்தன.

செம்மீனைப் பற்றிய அழகிய கருத்து ஒன்று உரைத் தாள். அது இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு அடிகோலிய முதல் இந்திய நாவல் என்றாள். மீனவர் குலத்துப் பெண் அவள் இந்துப் பெண், அவள் காதலித்தவன் ஒரு முஸ்லீம். மாப்பிள்ளை இனத்தைச்சேர்ந்தவன். இருவருக்கும் காதல் ஏற்படுத்தி மணவாழ்வில் புகுத்தி மத ஒற்றுமையை ஏற் படுத்த முயன்ற முதல் நாவல் என்றாள். இந்தக் கருத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/47&oldid=1113137" இலிருந்து மீள்விக்கப்பட்டது