பக்கம்:குப்பைமேடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

47

கள் கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் வேகத்தை ஆற்றத்

தேவைப்பட்டது,

அடிக்கடி வெளி நடப்புச் செய்வது இயல்பாகி விட்டது.

இந்தச் சட்ட மன்றத் தொற்றுநோய் அவளையும் பற்றிக் கொண்டது. வேறு ஒரு காரணமும் இருந்தது: கதையில் கருப்போல் அது அடங்கி இருந்தது; அதை அவள் வெளியே கூறவில்லை

- 12

மறுபடியும் எதிர்வீட்டுக்காரர் வந்து என் மேலான மவுனத்தைக் கலைக்கிறார். திடீர் என்று ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு கண்டவர்போல் என்னோடு பேச்சுக் கொடுத்தார்.

'நீங்கள் அந்தக் குப்பைப் பொறுக்கியோடு பேசுவது சரி என்று படவில்லை' என்று ஆரம்பித்தார்.

'காரணம்?'

'நமக்கு என்று ஒரு சமூக நிலை இருக்கிறது. அவன் ஊர் சுற்றி, குப்பைப் பொறுக்கி; ஒதுக்கப்பட்டவன்; அநாதை, அவனைச் சரி சமானமாக வைத்துக் கொண்டு நீங்கள் பேசுவது எனக்குக் கொஞ்சம்கூடப்பிடிக்க வில்லை," என்றார்.

"அவன் ஒரு உதிரிப்பூ, கருகிய மொட்டு! காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகு, அது சுயசரிதம் தாங்கி இருக்கும்' என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/49&oldid=1113139" இலிருந்து மீள்விக்கப்பட்டது