பக்கம்:குப்பைமேடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

ராசீ

"அதை உதறித் தள்ளுவது தானே'

'கதறி அழும் அழுகைகளுக்கு நாம் செவி கொடுக் காமல் இருக்க முடியாது ' என்றேன். மேலும் சில விளக்க கங்கள் தந்தேன்.

'இந்தப் பிள்ளைகள் அக்குடும்பத்து உபரிப் பொருள் கள்; அதனால் தூக்கி எறியப்பட்டவர்கள், உபரி என்ப தாலேயே உதவாதவர்கள் என்று பொருள் அல்ல. விளைச்சல் அதிகமானால் கோதுமையைக் கடலில் கொட்டி விடுகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். அந்த கோதுமை கடலில் கொட்டப்படுவதாலேயே அது குப்பை என்று உதறித் தள்ள முடியாது. சரியாகப் பயன்படுத் தினால் அது உணவுப் பண்டம். மானுடம் சரியாகப்பயன் படுத்தப்படவில்லை. அதனால் இவர்கள் குப்பை மேட் டைச்சுற்றி வருகிறார்கள்' என்றேன்.

அவரால் என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள இயல வில்லை.

'அவன் ஒரு பி. ஏ. பட்டதாரி' என்றேன்.

"நம்ப முடியவில்லையே' என்றார். 'அதுதான் கதை" என்றேன். இவன் செய்தது ஒரு தவறு; மொழிப் பற்று; தமிழ் மீடியம்' படித்தான். உபகாரச் சம்பளம் கிடைத்தது; வெளியே வந்த பிறகுதான் தெரிந்தது தான் செய்தது அபகாரம் என்று. புது அளவுகோல்கள் அவனை நிராகரித்து விட்டன. தொழில் பெறத் தேர்வாளர்களி டம் விலைபேசப் பொருள் இல்லை. சாதிகள் நீதிகள் பேசின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/50&oldid=1113140" இலிருந்து மீள்விக்கப்பட்டது