பக்கம்:குப்பைமேடு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

ராசீ

'யார் சார் தயாளனா?" என்றார்கள்.

அவன் பெயர் தயாளன் என்பது அவர்கள் சொல்லித் தான் தெரிந்தது. குப்பன் குப்புசாமி, இப்படிச் சொல்லித் தான் எனக்குப் பழக்கம்.

'அவன் ரொம்பவும் இரக்க குணம் உடையவன் சார்! அவன் ஒரு மகளிர் பாதுகாப்பு விடுதி நடத்துகிறான்' என்றார்கள்.

அவன் புது வியாபாரம் தொடங்கிவிட்டான் என்று தவறாக நினைத்தேன். மேலும் விசாரித்தேன்.

பம்பாயில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தார்களே அவர்களைப் பற்றி யாராவது கவலைப் பட்டார்களா? அவர்களுக்கு வாழ்வு தர யாராவது செயல்பட்டார்களா? அந்த அபலைகளில் ஒருத்திக்கு அவன் வாழ்வு தந்திருக் கிறான். அவர்கள் தக்க தொழில் நடத்த நிதி திரட்டித் தொழில்சாலை வைத்து அவர்களுக்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கிறான் என்பது தெரிந்தது.

குப்பையில் பழகியதால் ஒதுக்கப்பட்ட மானுடத்தை இனம் கண்டு அவர்கள் வாழ்க்கையை மாற்றினான் என் பதைக் கண்டு கொள்ள முடிந்தது.

இந்தக் குப்பை மேட்டைச் சுற்றி என் சிந்தனை சுழன் றது. இந்த இளைஞர்களுக்கு ஏன் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரக்கூடாது.

மக்களுக்கு ஒரு சமூக உணர்வு ஏற்பட்டுக் குப்பை போடும்போதே தாள்களை வேறுபடுத்தித் தனி ஒரு தொட்டியில் போடக் கூடாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/52&oldid=1113235" இலிருந்து மீள்விக்கப்பட்டது