பக்கம்:குப்பைமேடு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

ராசீ

'அப்பாவுக்கு அம்மாவை உதைப்பதற்கும், சண்டை பிடிப்பதற்கும், சாராயம் குடிக்கக் காசு தேடுவதற்குமே நேரம் சரியாகப் போய்விடுகிறது.

அம்மா எங்களைக் கண்டிக்கிறாள்.

"துப்புக் கெட்டவனாக இருக்கிறாயே, திருடக் கூடாதா, சாராயம் விற்கப் போகக் கூடாதா, குப்பைத் தாள் தான் பொறுக்க வேண்டுமா என்று கேட்பாள்', என்றான்.

பின் ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாய்?'

திருடச் சென்ற போது செமை உதை கிடைத்தது?" என்றான். -

புற நானுற்றில் ஒரு பாட்டு வருகிறது.

'முதல் நாட் போரில்

தன் அண்ணனைப் போர்க்களம்

அனுப்பினாள்; அடுத்த நாள்

கணவன் சென்றான்; அதற்கு

அடுத்த நாள் மகனை அனுப்பினாள்' என்று கூறு கிறது.

இந்தச் சாராய விற்பனை வழக்குகளில் தானும் சிறை செல்கிறாள் மறக்குடிப் பெண் என்பது அறிய முடிந்தது.

கன்னம் அழகிய கிண்ணம். ஒரு குழந்தையோடு பேசி

னேன். என்ன வென்றா கேட்கிறீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/54&oldid=1113228" இலிருந்து மீள்விக்கப்பட்டது