பக்கம்:குப்பைமேடு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

53

"நீ நல்லவனா கெட்டவனா?' என்றேன்.

'நல்ல பையன்' என்றான்.

'கெட்ட பையனாக இரு' என்றேன்.

"மம்மி தான் என்னை நல்ல பையனாக இருக்கணும் என்று சொல்றா' என்றான்.

"மம்மி பேச்சைக் கேட்காதே; நான் சொல்றதைக் கேளு' என்றேன்.

'சரி இனிமேல் கெட்ட பையன் நான்' என்றான்.

தாய் கற்றுத்தரும் ஆரம்பப் பாடம் நல்லது தவிர வேறு ஏதும் இல்லை. காலம் மாறுகிறது. தாய் சொல்லை அவனால் காக்க முடியவில்லை.

ஏன் இந்தத் தாய் துணிந்து அவனைக் கெட்டவனாகச் சொன்னாள். பசி வந்தால் பத்தும் பறந்து விடுகிறது. தத்துவங்களே தலைகீழ் ஆகின்றன.

என் சிந்தனை அந்தக் கந்தனை அனைய தாள் தெரி இளைஞரைச் சுற்றிச் சுழன்றது. அவர்களுக்கு வந்தனை செய்து வழி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன்.

-14

சற்று நேரத்திற்கு எல்லாம் அறுவை நிபுணர் அடுத்து

வந்து கதவின் மணியை அழுத்தி அதனைத் திறக்க வைத் தார். அவர் வருகையை எப்படித்தடுக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/55&oldid=1113229" இலிருந்து மீள்விக்கப்பட்டது