பக்கம்:குப்பைமேடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

ராசீ

புதிய வினா அது அவர் வாழ்வு பற்றியது. "மனிதன். எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ முடியும்?" என்று கேட் டார்.

"இலக்கியச் சான்றா, வாழ்க்கைச் சான்றா?' என்று கேட்டேன்.

'நடைமுறை; அதற்கு விடை தருக' என்றார்.

'ஆண்டுகள் ஆயிரம் வாழமுடியும். அதற்கு நம்மைத் தகுதி படைத்துக் கொள்ள வேண்டும்' என்றேன்.

'என்ன சார் அளக்கிறீர்' என்று விளக்கம் கேட்டார்.

'ஏசுநாதர் இன்னும் வாழ்கிறார். வள்ளுவர் வாழ்ந்து கொண்டே இருக்கிறார். பாரதி ஆயிரம் ஆண்டு வாழ் வார்' என்று கூறினேன்.

அதைக் கூறவில்லை. 'என்னைப் போன்ற சாமானி யர்கள்' என்றார்.

'எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்று நினைக் கிறோமோ அவ்வளவு காலம் வாழலாம்' என்றேன்.

'அதெப்படி முடியும்?'

"வாழ்வில் லட்சியங்கள் இருக்கும்வரை வாழ முடியும் அவற்றை விட்டு விட்டால் சோர்வு ஏற்பட்டு விடுகிறது. மனத் தளர்ச்சி ஏற்படுகிறது. நம்மையே நாம் வெறுக்கத் தொடங்கிவிடுகிறோம். அப்பொழுதுதான் சாவு நம்மை அணுகுகிறது' என்று கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/56&oldid=1113230" இலிருந்து மீள்விக்கப்பட்டது