பக்கம்:குப்பைமேடு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

ராசீ

வது என்று சிந்தித்துச் சிந்தித்துச் செயல்பட்டுத் தம் அறிவைப் பயன்படுத்திய வாழ்க்கை வியட்நாம் சுந்தரத்தைப் போல வெறுமை உற்றுக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது.

அதைவிட அவலமான செயல் டி.வி. யின் முன்னால் உட்காருவது; அதையே பார்த்துக் கேட்டு வெற்றோசை யில் காலம் கழிப்பது. இவையெல்லாம் நினைவுக்கு வந்தன. அவருக்கு யான் கண்ட ஒரு தமிழாசிரியரின் வாழ்க்கையை எடுத்துக் கூறினேன்.

'இதே தெருவில்தான் போகிறார் வருகிறார் நீங்கள் அவரைக் கவனித்து இருக்க மாட்டீர். நான் அவரோடு பேசி இருக்கிறேன். பின்னால் அவர் கையைப் பிடித்துக் கொண்டு பக்கத்தில் உள்ள பள்ளிக்கு அவர் பெயரன் அவரைத் தொடர்வான்; அவர் கால்கள் சுருசுருப்பாக இயங்கும்; முகத்தில் மலர்ச்சி; அவன் ஏதோ கேட்பான் இவர் ஏதோ சொல்லிக் கொண்டு செல்வார்.

அவரைச் சில நாள் காணவே இல்லை. என்ன ஆயிற் றோ என்று வருத்தப்பட்டேன். மறுபடியும் அவர் அந்தப் பையனோடு நடந்து வந்தார்.

என்ன சார் ரொம்ப நாள் காணோமே. உடம்பு?'

'என் மருமகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டியது ஆயிற்று. அவன் ஆபீசுக்குப் போய்விடு கிறான். எல்லாவற்றையும் நானே கவனிக்க வேண்டிய தாக இருந்தது. இப்பொழுது தான் வர முடிந்தது'.

'அடுத்தது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/58&oldid=1113232" இலிருந்து மீள்விக்கப்பட்டது