பக்கம்:குப்பைமேடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

57

'பையன்தான் பிறப்பான் என்று எதிர் பார்த்தேன். அது பெண்ணாகி விட்டது. பரவாயில்லை. இந்தக் காலத்திலே அதெல்லாம் பார்க்க முடியாது. இவனும் தான் கஷ்டப்படப் போகிறான்; அவளும் தான் கஷ்டப் படப் போகிறாள், யார் பிறந்தால் என்ன? எல்லாம் ஒன்று தான்' என்று கூறுகிறார்.

மறுபடியும் அதே தெம்பு. "அவர் ஒரு தொடர்கதை' என்று தான் எண்ணத் தோன்றுகிறது. முதியவர்களுக்குச் சிறந்த பொழுதுபோக்கு, பணி, வாழ்க்கை எல்லாம் பேரன் பேர்த்தி தான்' என்று கூறினேன்,

'அந்தக் கொடுப்பனை எனக்கு இல்லை. இந்தப் பையன் எதற்கும் வழி வர மாட்டேன் என்கிறான். என்ன செய்வது?' என்றார்.

'கொடுப்பனை விற்பனை இதெல்லாம் தெரியாது; நான் சொல்லப்போவது அழகான கற்பனை; அதனை நீர் ஏற்றுத்தான் ஆக வேண்டும்' 'ஏற்றுக் கொள்வதாக இருந்தால் சரிதான்; இல்லை என்றால் மாற்றுதான் கூறமுடியும்' 'காற்றில் வந்த கவிதை இது; நேற்றுவரை' என்று தொடர்ந்து வருகிறது" "எதைச் சொல்கிறீர்?" -

'நேற்றுவரை அவர்கள் உறவு'

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/59&oldid=1113233" இலிருந்து மீள்விக்கப்பட்டது