பக்கம்:குப்பைமேடு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

ராசீ

தொடர்ந்து இருக்கிறது; இன்றுவரை

தொடரும், நாளை வரை யாதோ அறியேன்' என்றேன்.

"என்ன சார் கண்ணதாசனாக மாறிவிட்டீர்'

'அவர் கண்ணனின்தாசன் நான் வாழ்க்கை நேசன்,

உன் மகன் அந்தத் துப்புரவுத் தொழிலாளியைக் காதலிக்கிறான்' என்று தொடர்ந்தேன்.

'உறவைப் பற்றிப்பேசாமல் துப்புரவு துலக்குகிறீரே'

'குப்பன் சொன்னது; அது தப்பாக இருக்காது.

"அவனுக்கு எப்படித் தெரியும்?"

"அவர்கள் தான் எங்குப் பார்த்தாலும் திரிந்து கொண்டு இருக்கிறார்களே, கடற்கரை, பூங்காக்கள் எங்கும் அவர்களைப் பார்க்க முடிகிறது. நீக்கமற நிறைந்த அவர்கள் போக்கு அவன் கண்ணில் படாமல் எப்படிப் போய்விடும்?'

"ஏன் இப்படித் திரிகிறார்கள்'

கதவு தட்டக் தயங்குகிறார்கள்; தட்டினால் திறக்கப் படுமா என்று காத்திருக்கின்றனர்.'

'யார் அந்தப் பெண்?"

'உங்கள் மருமகள் என்று அறிமுகப்படுத்தினரே அந்தத் திருமகள்தான்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/60&oldid=1113234" இலிருந்து மீள்விக்கப்பட்டது