பக்கம்:குப்பைமேடு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

59

'அடப்பாவி! அவள் தானா கிடைத்தாள்?'

'அவளுக்கு உன் மகன்தான் கிடைத்தாள்.'

'அக்கிரமம்'

எது?"

'அவள் குப்பை பெருக்குகிறாள்' 'வீடு பெருக்க உதவுவாள்'

'அவளை எப்படி சார் விரும்பினான்?'

'அவன் பார்த்துப் பழகிய முதல் பெண் அவள்.'

' அவனைக் கட்டுப்பாடாக வளர்த்தது தவறாகப் போய்விட்டது'.

'அவன் தேர்வு நியாயந்தானே?" "என்ன சார் நியாயம் கண்டு விட்டீர்கள்: நேற்று வரை அவள் தெருப் பொறுக்கி; இன்று என் மகனை மயக்கிய சிறுக்கி; நீங்கள் அவளுக்கு ஒலி பெருக்கி என்றார்.

ராஜேந்திர் ஸ்டைலில் பேசுகிறீரே?' 'எதை வச்சி சொல்லுகிறீர்?"

"பொறுக்கி; சிறுக்கி, பெருக்கி என்று அடுக்கு மொழி யில் மிடுக்காகப் பேசுகிறீரே'

'சரி விளையாட்டு உங்களை விட்டுப்போகவில்லை சோகத்திலே சொற்கள் அப்படி விழுவது இயற்கை'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/61&oldid=1113442" இலிருந்து மீள்விக்கப்பட்டது