பக்கம்:குப்பைமேடு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

ராசீ

'அவன் மேஜர் சார்'

'என் வீட்டுப்படி ஏற முடியாது'

'சிறிய படிகள் தானே; அப்படிச் சொல்லக் கூடாது; அவள் ரொம்பவும் அழகாக இருப்பாள்"

"அழகு இருந்தால் போதுமா? அந்தஸ்து இருக்க வேண் டாமா? குப்பை வேலை செய்கிறவளுக்கு எப்படி சார்

அந்தஸ்து வரும்".

'இவள் அந்தத் தொழிலை ஏற்றுக் கொண்டதால் அந்தத் தொழிலுக்கு அவள் அந்தஸ்து கூட்டி இருக் கிறாள். .

'வசதி இருக்க வேண்டாமா?"

"அதை உதறித் தள்ளிவிட்டுச் சேவை செய்ய வந்திருக் கிறாள்"

"இவள் என்ன கஸ்தூரிபாய் காந்தியா?"

'உன் மகன் காந்தியாகி விடுவான், அப்பொழுது இவள் கஸ்தூரியாவாள்?"

'படிப்பு?"

'சமூக சேவகி என்ற பட்டம் பெற்று இருக்கிறாள்.

கொடைக்கானலில் அன்னை தெரிசா மகளிர் பல்கலைக் கழகத்தில் படித்து இருக்கிறாள்".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/62&oldid=1113444" இலிருந்து மீள்விக்கப்பட்டது