பக்கம்:குப்பைமேடு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

ராசீ

இந்தத் தொழிலை ஏற்றுக் கொண்டாள். தாழ்த்தப்பட்ட வர்கள் என்று சிலரைச் சுட்டிக் காட்டி அவர்களில் ஒரு சிலர் உயர்த்ப்படுகிறர்கள். அவர்கள் உயரலாம்; இனம் உயர்ந்து விடாது அந்தத் தொழிலை உயர்த்த வேண்டும்.

அது தான் சமூதாயத்தில் செய்து காட்ட வேண்டிய முரல் புரட்சி" என்று நினைக்கிறாள்.

"யார் அவளுக்குச் சொன்னது"

'அன்னை தெரிசா"

'இது என்ன சார் இருக்குது புதுசா. இதுவரை காந்தி, நேரு என்று பேசிக் கொண்டிருந்தவர்கள், இப் பொழுது ஒரு மேல் நாட்டு சேவகியர் பெயரைச் சொல்லு கிறார்கள்.'

"அவர்கள் சேவை இன்று மிகவும் தேவை. சாதி வெறி யும் மத வெறியும் தலை தூக்கி ஒருவரை ஒருவர் அடித்து இரத்தம் பெருக்கும் இந்நாளில் அவர்கள் அறிவுரை தேவைப்படுகிறது. இது தான் மருந்து; மனிதனை நேசிக் கக் கற்றுகொள்; தாழ்ந்தவர்களைத் துரக்கிவிடு. நோயுற்ற வர்க்கு ஆறுதல் அளி: அன்பு என்பதை அழகுடன் பரப்பு.’ இது அவர்கள் கற்றுத்தரும் படிப்பினைகள். நொந்து விட்ட இந்தப் 'பாரதத்துக்கு இச்சேவை தேவை என்று விளக்குகிறார்.'

'அறுபதைக் கடக்கட்டும் இது அருமையான சேவை. இருபதில் இது என்ன தேவை. நான் ஒப்புக் கொள்ள முடியாது அந்தப் பாலையை' என்று தீர்மானம்போட் டார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/64&oldid=1113446" இலிருந்து மீள்விக்கப்பட்டது