பக்கம்:குப்பைமேடு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

ராசீ

கிடக்கிறார்கள். இவள்தான் தேவை என்றால் அவள் போக்கை ஏற்றுக்கொள்ள முடியும். இது வீண்பிடிவாதம்.

படித்தவள். இதைவிட அவள் அறிவு பயன்படத்தக்க இடங்கள் பல உள்ளன. ஆசிரியையாகப் போகலாம்; ஆபீசுகளில் வரவேற்பு அதிகாரியாகப் பணி செய்யலாம். இல்லை அவனோடு சேர்ந்து பாங்கியில் தொழில் செய்ய லாம். இது என்னால் சம்மதிக்க முடியாது. நாளைக்குப் பத்திரிக்கைகாரன் வருவான் எங்கள் வீட்டை முற்றுகை இடுவான்; ஏற்கனவே குப்பைத் தொட்டியை உடைத்த தற்கு ஏராளமான பேட்டிகள்; அதைப்பற்றி வாதங்கள்; இதற்கு நிச்சயம் வந்து குவிந்து விடுவார்கள். ஏன் அவர் கள் பத்திரிக்கைகளுக்குப் புது விஷயமாகத் தேவை என்ப தற்காக விளம்பரம் தேவைதான்; இந்த வகையில் அல்ல.

பட்டப்படிப்பு சில திட்டங்களை வகுத்துத்தந்திருக் லாம்; மட்டற்ற மகிழ்ச்சிதான்; ஆனால் அவள் மணமேடை ஏறக்கூடாது. மணமேடை ஏறியதும் அவன் பின்னால் தான் அவள் சுற்றி வரவேண்டும்; இந்தச் சுழற்சியில் இருந்து தப்ப முடியாது' என்றார்.

'உங்களுக்கு என்று சில பிடிவாதங்கள், தவறான சிந் தனைகள், காலம் காலமாகப் பின்பற்றி வரலாம். அவற் றிற்குப் புதிய சமுதாயம் மதிப்புத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்'.

"ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகக் கூடாது. அப்படி உருவானால் ஒதுங்கி விடுவது நல்லது அவளோடு வாழ்வதும் வாழாததும் என் மகனின் பொறுப்பு: அவன் முடிவு செய்ய வேண்டியது; அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/66&oldid=1113447" இலிருந்து மீள்விக்கப்பட்டது