பக்கம்:குப்பைமேடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ராசீ

டியது. அம்மையார் குரல் ஆதிக்கம் செலுத்தியது. அது ஒன்றும் புதுமையாகப் படவில்லை.

அங்கே போய் இவர் விஷயத்தைக் கொட்டி இருக் கிறார். அவர்கள் குழம்பி இருக்கிறார்கள். கதை சூடு பிடிக்கிறது என்பதை உணர்ந்தேன்.

அவர் குப்பைத் தொட்டியைத் தொடர் கதையாக் குவது வியப்பாக இருந்தது. என்றாலும் அதற்கு மதிப்புத் தந்து தான் ஆக வேண்டும். அதற்காகச் கனகாவிற்குக் கடிதம் வரைய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கனகா என் மனைவி.

அன்புள்ள கனகா,

இது எனக்காக எழுதவில்லை. எதிர் வீட்டுக்காரருக் காக எழுதுகிறேன். இங்கே ஒரு சின்ன விஷயம். அவர் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அவரிடம் அவ சரத்துக்குக் கடன் ஒன்றும் வாங்கவில்லை. அவரும் அப் படிக் கொடுத்து உதவவில்லை. அவருக்குப் பொழுது போகாவிட்டால் இங்கு வந்து உட்கார்ந்து விடுவார். அவர் இரண்டு விஷயங்களைப் பற்றிப் பேசுவார்; ஒன்று அவர் பையனைப் பற்றி; மற்றொன்று நம் தெருவில் புழுதி கொட்டிவைக்கும் தொகுதித் தொட்டில், அது சில சமயம் பெற்ற குழந்தைகளைப் போட்டு வைக்கவும் உதவி யுள்ளது. அது பற்றி உனக்கும் தெரியும். அதே தொட்டி தான் அது அங்கு இருக்கக் கூடாது என்கிறார் எதிர் வீட் டுக்காரர். காலம் காலமாக இந்தப்பாரத மண்ணில் இந்தத் தெருவில் குடியிருக்கும் பெரும்பான்மையோர் அது அங்கு தான் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். வழக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/68&oldid=1113450" இலிருந்து மீள்விக்கப்பட்டது