பக்கம்:குப்பைமேடு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

67

உச்சநீதிமன்றம் வரை போய் இருக்கிறது. ஆனால் சர்ச்சை இன்னும் முடிவாகவில்லை. அது அகில தெருப் பிரச்சனை ஆகாமல் இருக்க அந்த வீட்டுக்காரர் இடித்த குப்பைத் தொட்டியைத் தம் சொந்தச் செலவில் கட்டிக் கொடுத்துவிட்டார். ஆனால் அது அங்கு இருக்கக் கூடாது என்பதில் பிடிவாதம் பிடிக்கிறார்.

பழகிய தோஷம் அதனால், அந்தச் சுமையை நம்மீது ஏற்றவிரும்புகிறார். அது அங்கு இருப்பதால் அவருக்குத் தூக்கம் வருவது இல்லையாம். அது உருண்டு வந்து அவர் மீது புரள்வது போல் கனவு வருகிறதாம். குப்பைத் தொட்டி புரண்டு வந்து மார்புமீது புரண்டால் கோடிப் பொன் வரும் என்று கனா நூல் உரைக்கிறது என்றும் எடுத்துச் சொன்னேன். கோடிப்பணம் வராவிட்டாலும் இந்தக் குப்பைத் தொட்டிக் கனவு வராமல் இருந்தால் போதும் என்று கதறுகிறார்.

அதுசரி டி.வியில் ஒரு கதை தொடர்ந்து வருகிறது. அதைப் பார்க்கிறாயா? அவள் காதலன் அவளைக் கைவிடு கிறான்; மற்றொருவனுக்கு அவள் தந்தை வற்புறுத்திச் செய்து வைக்கிறார். அந்தக் குழந்தை எட்டாவது மாதத் திலேயே பிறந்து விடுகிறது. அந்தக் குழந்தை பெரியவ ளாகி வருகிறாள். அவள் தன் சாடையைப் பெற்றிருக்க வில்லை. அதனால் அவன் அவள் மீது சந்தேகப்படுகிறான். விவாக ரத்துவரை போகிறது. பிரியவும் செய்கிறார்கள். பிறகு தெரிகிறது அவள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று. இந்தக் கதையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? இதைத் தொடர்ந்து பார்க்கிறாயா இல்லையா. பார்க்கா விட்டால் அதைப்பற்றி எழுதி உன் தாளைக் கெடுக்க வேண்டாம் கிறுக்கி என்னை அறுக்க வேண்டாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/69&oldid=1113452" இலிருந்து மீள்விக்கப்பட்டது