பக்கம்:குப்பைமேடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

ராசீ

எதிர் வீட்டுக்காரர் மற்றொரு பிரச்சனையில் அகப் பட்டுக் கொண்டு இருக்கிறார் அவர் மகன் ஒரு புரட்சிக் காரியைக் காதலிக்கிறான்; அவள் உன்னைப் போல்கவிதை எழுதிக்கொண்டு தன்னைப் புரட்சிக்காரி என்று விளம் பரப்படுத்திக் கொள்ளவில்லை. செயலில் காட்டுகிறாள். குப்பை கூட்டும் தொழிலாளர் தேர்வுக்குச் சென்று அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு அத்தொழில் செய்கிறாள்.

அவள் வயிற்றுப் பிழைப்புக்காக அல்ல, வைராக்கியத் திற்காக; தொழிலுக்குப் பெருமை சேர்க்க, அவள் தெரசாவின் உ ைர ைய க் கே ட் டு இருக்கிறாள். அவர்கள் கல்லூரியில் அம்மூதாட்டியர் வந்து பட்ட மளிப்பு விழாவில் உரையாற்றி இருக்கிறார். அதில் அவர்கள் சொன்னார்களாம். நீங்கள் சமூக சேவகம் என்று தொழிற்படிப்பைப் படித்தால் மட்டும் போதாது. அதைச் செயல்படுத்திக் காட்டுங்கள். துணிந்து குப்பை கொட்டும் தொழிலை ஏற்று அத் தொழிலுக்கு மதிப்புத் தாருங்கள், விபச்சாரத்தால் இழுக்கப்பட்டு வழுக்கி விழு பவரை ஆதரித்து அவர்களுக்கு விமோசனம் தேடுங்கள். அவர்கள் பலர் நோய்வாய்ப்பட்டு வெளியில் சொல்ல முடியாமல் வேதனைப்பட்டுக் கொண்டு வரும் நிலையில் இருப்பார்கள் அவர்களுக்குத்தக்க மருத்துவ உதவிசெய்து அவர்களை வாழ வையுங்கள். பிறர் செய்யும் பாவங் களைத் தாம் சுமந்து இவர்கள் சுமைதாங்கிகளாக வாழ் கிறார்கள். இந்த அபலைகள் இருட்டில் புகழப்படுப வர்கள். வெளிச்சத்தில் இகழப்படுபவர்கள். இதைப் போன்ற உதிரிகளை நீங்கள் வாழ வைக்கவேண்டும்' என்று பேசி இருக்கிறார்கள். அது அந்தப் பெண்ணின் நெஞ்சில் ஆழப்பதிந்து விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/70&oldid=1113453" இலிருந்து மீள்விக்கப்பட்டது