பக்கம்:குப்பைமேடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

73

இருக்கட்டும் அதைப்பற்றி நான் சொல்வதற்கு இல்லை. இது உள்ளுர்ப் பிரச்சனை, அங்கிருப்பவர்கள் கூடிப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சனை என்று எழுதியி ருந்தாள். பிரதமரின் பேச்சைப்போல இது எதிர் ஒலித்தது.

' அதைவிட அதிர்ச்சி தரும் அழகான செய்தி உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். அதனை ஒரு பிரச்சனை யாக உருவாக்கத் தேவை இல்லை குழந்தைக்குத் தாயா வது பெண்ணின் பிறப்பு உரிமை. அதற்குத் தந்தை யார் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டு மடையர்கள் ஆகத் தேவை இல்லை. தந்தை என்பவன் யார்? தாய் கருவை ஏந்தி உருக் கொடுத்துப் பிறப்பு என்ற அந்தஸ்தைச் கொடுக்கிறாள். தந்தை அந்தக் குழந்தை யின் வளர்ப்புக்குத் துணையாகிறான். அப்பொழுது தான் அவன் தந்தை என்ற உரிமையும், பெருமையும் அடை கிறான். இனிமேல்தான் பிறக்கும் குழந்தைக்குத் தந்தை தேவைப்படுகிறது. அது நீங்களாகத்தான் இருக்க வேண் டும் வேறு வழி இல்லை. அதில் உங்களுக்கு எந்தச் சுமை யும் இராது; உங்கள் அன்பை உலகத்தில் எந்தக் குழந்தை யிடமும் செலுத்தலாம். அதில் அருவெறுப்புக் காட்ட மாட் டிர்கள் காட்டத் தேவையில்லை. அது யாருக்குச் சொந் தம் என்ற வினாவுக்கு விடை தேவை இல்லை; அது இந்த உலகத்தின் உடைமை; மண்ணில் தோன்றும் மலர். பண் னில் நாதம்; அதற்கு யார் வேண்டுமானாலும் உடைமை எழும் கொண்டாடலாம்; என்றாலும் வளர்ப்பு எளிமை கருதி அதற்கு ஒர் எல்லை தேவைப்படுகிறது. அது ஆரம் பத்தில் என் மடி; பிறகு உங்கள் தோள்கள்; எப்படி?" மேலும் படிக்கிறேன்.

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/75&oldid=1114138" இலிருந்து மீள்விக்கப்பட்டது