பக்கம்:குப்பைமேடு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

75

கிறேன். இங்கு இருப்பவர்க்கும் அப்படித்தான் சொல்லிப் பெருமைப்பட்டு வருகிறேன்.

யார் இதற்குத் தந்தை என்று கேட்டுக் கொண்டிருக்க, இது புதை பொருள் ஆராய்ச்சி அல்ல. இது உறவு முறை இயல். பிறந்ததும் தாய் சுட்டிக்காட்டும் முதல் மனிதர் தான் தந்தை.

'இதோ பார்ரா இவர்தான் உன் அப்பா' என்று தாய் சொல்கிறாள்.

'இவர் என் கணவர் என்று அதற்கு அறிமுகம் செய் வேன் என்று எதிர்பார்ப்பீர்கள். அது செய்ய மாட்டேன்'

இதில் எந்தப் புதுமையும் இல்லை. நினைத்துக் கவலைப்படத் தேவை இல்லை; இதற்காகப் பொய்களைப் பேசிக் கொண்டிருக்கத் தேவை இல்லை.

நான் முன் ஒருவரை மணந்தது உண்மைதான்; அவ

ரோடு வாழ்ந்த தும் உண்மை; அதனால் விளைந்ததும் இது என்பது உண்மை. இதில் வெட்கப்படத் தேவை இல்லை

கொஞ்சம் பொறுத்து இருக்கலாம். விவாகரத்து ஆகியதும் உம்மோடு உறவு கொண்டதும் நான் தாயாகி இருக்கலாம்; கவலைப்படவேண்டாம்; அடுத்த குழந்தைக்கு நீர்தான் ஆதாரமாக இருப்பீர். அதிலே ஒரு உடைமை இன்பம் காணலாம். .

இது என் ஆரம்ப அனுபவம். எல்.கே.ஜி. படிப்பு யூ.கே.ஜி இன்னும் எவ்வளவோ படிப்புகள் இருக்கின்றது நீண்ட வாழ் நாள் இருக்கிறது. நாம் சேர்ந்து வாழப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/77&oldid=1114140" இலிருந்து மீள்விக்கப்பட்டது