பக்கம்:குப்பைமேடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

ராசீ

திருவேறு தெள்ளியர் ஆதல் வேறு என்பதைத் தெரிந்து வாழ்கிறேன்; தெள்ளியர் என்பது நாம் கொள்ளும் கொள் கையில் பிறப்பதாகும். இன்று நடக்கும் போராட்டங்கள் எல்லாம் பணமா? மனிதத்தனமா? என்பதுதான். மனித ராக வாழவேண்டும் என்பதுதான் என் லட்சியம்.

நீங்கள் மிகவும் மாறி இருக்கிறீர்கள் என்பது கண்டு பெருமைப்படுகிறேன். தனி மனிதன் தலை நிமிர்ந்து வாழ் வதால் அவனுக்கு மட்டும் பெருமை. எழுத்தில் நிமிர்வு இருந்தால் அந்த எழுத்துக்குப் பெருமை; அது அவரைப் போன்று எண்ணுகிறவர்களின் எண்ணமாக இருப்பதால்

அத்தனை பேரும் நிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதுதான் பொருள்.

ஆபாசப்படங்கள் என்பது பெண்களின் அங்கங்களை அம்பலப்படுத்துவது மட்டும் அல்ல; காணிக்கை என்ற பெயரால் நாம் அடிமைப்பட்டு, சலுகைகளை எதிர் பார்த்து ஒரு சில அதிபர்களின் படங்களைப் புத் தகங்களில் போடுவதும் ஆபாசம் ஆகும் என்று கருதுகிறேன். அவர் களுக்கு அது விருப்பாக இருக்கலாம்; மற்றவர்கள் அதை ஏற்பார்கள் என்று எதிர்பார்ப்பது மடமை. எழுத்து சுத்த மாக இருக்கவேண்டும் என்றால் இந்தப் பெருமைகளைச் சுவரில் ஒட்டக்கூடாது.

அதில் அவர்கள் மட்டும் தாழவில்லை. வாசகர் களையும் தாழ்த்த நினைக்கிறார்கள். அது அருவெறுப்பு உண்டாக்குகிறது என்று எண்ணிப்பார்ப்பது இல்லை.

தனிப்பட்ட் வாழ்வில் நீங்கள் தவறு செய்தால் பொறுத் துக் கொள்வேன்; எழுத்தில் அடிமைத்தனம் காட்டினால் என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது. ஆண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/80&oldid=1114143" இலிருந்து மீள்விக்கப்பட்டது