பக்கம்:குப்பைமேடு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

ராசீ

வாழ்க்கை விரிவு அடைகிறது. அன்பு செய்வதற்கு அழகிய குழந்தை தவழ்கிறது. இதை மனம் மகிழும் செய்தியாகவே கொண்டேன். புதிய வரவை வரவேற்று நின்றேன். காலம் புதிய புதிய சூழ்நிலைகளை உருவாக்கக் காத்துக் கிடக்கின்றன. ஞாலம் அதை வரவேற்றுப் புன்முறுவலுடன் ஏற்கும்; ஏற்றுதான் தீரும்" இந்த நினைவுகளோடு என் எழுத்துக்கு உட்காருகிறேன்.

எழுத்து தொடர்கிறது. அவள் தெரசாவின் அருமை மாணவி; ஒரு சோதனை நடத்துகிறாள். அந்தப் பெரியவருக்கு ஒரு அறைகூவல் விடுத்து இருந்தாள்; அதன் அடிப்படையில் அவ்விளைஞனின் காதலுக்குச் செவி சாய்த்தாள். சிரிக்காத அவனைச் சிரிக்க வைத்தாள், நகைக்காத அவனை மகிழவைத்தாள்; அவன் குரலில் களிப்புத் துள்ளியது; முகத்தில் மலர்ச்சி தழுவியது:

அவளை நினைத்து அவன் மகிழ்ந்தான். அழகு அவனை அள்ளியது; இளமை அவனை இழுத்துச் சென்றது. அணைத்து இணைந்து இன்புறத் துடித்தான். சோலைகள் அவர்களை வரவேற்று நிழலைத்தந்தன. கடல் அலைகள் அவர்களை வளைத்து நனைத்து இணைத்தன. நேரம் போகிறது; போய்க் கொண்டே இருந்தது. இருட்டு அவர்களுக்கு மறைவைத் தந்தது; என்றாலும் அவள் தன்னைக் கொடுக்காமல் தள்ளியே நின்றாள். அவள் தன் நிறையைக் காத்துக் கொண்டாள்.

அவனைத் தவறு செய்யவிட்டு, அதன் காரணமாகத் தாலி கட்டச் சொல்லி அவனுக்கு வேலிபோட விரும்பவில்லை. அவனுக்கு எந்த நேரமும் விடுதலை தர விரும்பினாள். மணந்தால்தான் தன்னைத் தொட முடியும் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/82&oldid=1114257" இலிருந்து மீள்விக்கப்பட்டது