பக்கம்:குப்பைமேடு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

ராசீ


அவள் எழுதிய கடிதத்தில் இவர்களைப் பற்றிக் குறிப் பிட்டு இருந்தாள். “நீங்கள் எழுதும் கதைகளை விட எதிர்வீட்டுச் சம்பவம்தான் கவர்ச்சிகரமாக உள்ளது. அவர்கள் திருமணத்துக்குள் சென்னை வந்து விடுவேன். அண்ணாநகர்க் குறுக்குத் தெருவிற்கே ஒரு தனி மகிமை இருக்கிறது. அங்கே இப்பொழுது வழி பறிக் கொள்ளை கள், செயின் திருட்டுகள் நிறைய நடக்கின்றன என்று செய்தித்தாளில் படிக்கிறேன். சென்னையில் எந்தக் கொலை, கொள்ளையும் நடந்தாலும் அது அண்ணா நகர் என்று லருவது பழகிவிட்டது.

அந்தப் பெண் இதில் பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்ய மாக இருக்கிறது. இதுவரை ‘காதல்’ தான் உயிர். அதற் காகப் பெண் எதையும் துறப்பாள் என்று தான் காட்டி இருக்கிறார்கள். இவள் சமுதாயப் பிரச்சனை ஒன்றில் பிடிவாதம் காட்டுகிறாள் என்றால் ஏதோ இந்தத் தேசம் புதிய சிந்தனையில் காலடி எடுத்து வைக்கிறது என்பதற்கு அறிகுறியாகிறது என நினைக்கிறேன். பெண்கள் என்றால் அவர்கள் தங்கள் உரிமைகளுக்குத் தான் போராடுபவர்கள் என்று கருதப்பட்டார்கள். அவள் தொழிலுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஒரு கொள்கைக்காகப் போராடுகிறாள் என்றால் அவள் பாராட்டத் தக்கவள் தான்.

அவர்கள் திருமண அழைப்பு வந்தால் தவறாமல் எனக்குத் தெரிவியுங்கள். காவிரிக் கரையை விட்டு அமைந்தகரைச்கு வருகிறேன். எனக்கு ‘டவர் பார்க் வந்து சுற்ற வேண்டும் என்ற ஆவல் பிடித்து இழுக்’ கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/84&oldid=1114217" இலிருந்து மீள்விக்கப்பட்டது