பக்கம்:குப்பைமேடு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

ராசீ

இவனுக்கு இந்தப் புதிய கற்பனை தோன்றியது. ஒப்பனை மிக்க மகளிரைக் கொண்டு ஒரு புதிய சொப்பனத்தைக் கண்டிருக்கிறான். என் கதையின் தொடர்ச்சிக்கு அவன் சந்திப்பு அவசியம் ஆகியது.

எதிர்பாராதபடி அவன் வந்து சேர்ந்தான்.

"என்னப்பா தயாளன் எங்கள் மீது தயவு வைக்க மறந்து விட்டாயா" என்றேன்.

நான் உங்களைப் பொறுத்தவரை பழைய கருப்பன் தான். விருப்பத்தோடு என்னைக் குப்பன் என்றே அழைக்கலாம்' என்றான்.

"உனக்கும் சிவப்பு விளக்குக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது' என்று கேட்டேன்.

"தொலைக் காட்சியில் அவர்கள் முகத்தை மூடி வைத்து அவர்களைப் பேச வைத்தார்கள். அவர்களுக்குப் புனர் வாழ்வு தர வேண்டு மென்று கனமானவர்கள் பேசி னார்கள். அதற்குப் பிறகு அவர்களுக்குச் சுமையாகி விட் டார்கள். ஒரு சிலர் சொந்த ஊர் கண்டு பந்த பாசங் களைத் தேடினார்கள். ஒரு சிலர் கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே' என்று பழைய வாழ்க்கையைத் தேடிக் கொண்டார்கள்.

காதல் பழக்கம் உண்டு என்று உம்மிடம் ஒதி இருக் கிறேன். அதனால் ஏற்பட்ட மோதலில் கிடைத்தவள் ஒருத்தி; அவளுக்கு அந்திய நாட்டு நோய்' என்று அவள் ஒதுக்கப்பட்டாள். குப்பையில் தாளைப் பொறுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/86&oldid=1114933" இலிருந்து மீள்விக்கப்பட்டது