பக்கம்:குப்பைமேடு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

85

பழக்கம்; இப்பொழுது அவளைத்தேர்ந்து எடுத்திருக் கிறேன். அவள் குப்பை அல்ல; கொஞ்சம் மூக்குச் சப்பை அவ்வளவு தான்.

காதல் செய்யத் தக்க கன்னி இளமான் அல்ல அவள்; குமரிப்பெண் என்று கூறமாட்டேன்; கட்டுப்பாடு என் பது என்னைத் தட்டுப்படுத்தியது இல்லை. அவள் வாழத் தலைப்பட்டவள்; எனக்கும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது. --

அவள் தன்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. தன் சிநேகிதிகள் சிலர் அபலைகளாக அல்லல் படுவதை எடுத்துக் கூறினாள். கடையில் சென்று டீ" குடிக்கும் பழக்கத்தை வெறுத்தாள்; அடுப்புப் பற்ற வைத்தாள்; அந்தப் புகை அவளுக்குப் புது வாழ்வு தந்தது. என்று தன் சுயசரிதததைச் சுவை குன்றாமல் கூறி முடித்தான்.

இதுவரை அவன் கூறியதில் எனக்கு எதுவும் புதுமை யாகப் படவில்லை. பதுமைபோல் இருந்து மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். கதை அம்சம் எதுவும் அதில் காணப்படவில்லை.

'இந்த இல்லம் திறப்பதற்கு உனக்கு நிதி எப்படிக் கிடைத்தது?' என்று கேட்டேன்.

'விளம்பர யாத்திரிகையர்களை நீர் பார்த்திருப்பீர். ஊதுவத்தி முதல் ஊறுகாய் வரை எடுத்துவந்து அறிமுகம் செய்வார்கள்.

வருகிறவர்கள் கேடிகளுக்கு அஞ்சி லேடிகள்' இருக்கின் றார்களா என்று கேட்டுக் கொண்டே வருவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/87&oldid=1114934" இலிருந்து மீள்விக்கப்பட்டது