பக்கம்:குப்பைமேடு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

ராசீ

அந்த வீட்டு மங்கல மாட்சியர்கள் 'அவர்கள் வீட்டு ஆடவர்கள். அவர்களை நாடாமல் இருக்க விரைவில் பேசி அல்லது ஏசி அனுப்பி விடுவதைப் பார்த்திருக்கிறேன்.

இந்த அபலைகளையே விளம்பரப் பொருள்கள் ஆக்கி வீடுகளில் அழைப்பு மணி அடிக்கச் செய்தேன்.

வந்தவர்கள் விசாரித்தார்கள்.

'பிழைப்பு வேண்டும்' என்றார்கள்.

'பிழை செய்யாதிருக்க நிதி உதவினார்கள்'.

சிவப்பு விளக்கு என்று கேட்டவுடன் சிந்திக்காமல் உடனே நிதி தந்து அனுப்பி விட்டார்கள்; அச்சம் அவர் களது ஆசாரமாக விளங்கியது; அது எங்களுக்குப் பயன் பட்டது. ஆரம்பம் 'அறம் செய விரும்பு' என்னும் ஆத்தி சூடியில் தொடங்கினோம; பின்னர் ஏற்பது இகழ்ச்சி என்பதால் தொழில் நிறுவனங்கள் நிறுவினோம்; உழைப் பால் உயர்ந்தோம்.

எங்கள் இல்லத்தில் யாரும் மறுபடியும் பழைய வாழ் வுக்குத் திரும்புவதில்லை. அவர்கள் சேவை செய்யத் தாய்மை உறவு வளர்க்க ஆதரவு குறைந்த குழந்தை களைச் சேர்த்துக் கல்வி வசதிதருகிறோம்.

மாமியார் கொடுமை, கட்டிய கணவரின் கடுமை. இதனால் தற்கொலைக்குத் தள்ளப்படுபவர்கள் பலர் இங்கு பாதுகாப்புப் பெறுகின்றனர். அதே போல மருமகளில் அட்டகாசம் தாங்காமல் சரண் அடைந்த மாமியார்க்கும் இடம் தந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/88&oldid=1114935" இலிருந்து மீள்விக்கப்பட்டது