பக்கம்:குப்பைமேடு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

87

வரதட்சணைக் கொடுமைகள் ஏற்பட்டால் தாராள மாக இங்கே வரலாம் என்று இடம் அளித்திருக்கிறோம். முடிந்தால் கேட்ட வரதட்சணை தந்தும் வாழ்க்கையை. அமைத்துத் தங்திருக்கிறோம். தண்டிப்பதை விட அவர் சளுக்குப் பொருள் உதவி செய்வதும் அவசியம் என்பது உணர்ந்து செயல்படுகிறோம்.

முதியவர்கள் தொண்டு செய்யும் மனத்தவர்கள் இங்கு வந்து இடம் பெறுகிறார்கள். எங்கள் இல்லம் 'ஆறுதல் இல்லம்' என்ற பெயர் பெற்றுள்ளது என்று தயாளன் தன் வாழ்க்கையில் நடந்த சில மாற்றங்களை என்னிடம் சொல் லிக் கொண்டிருந்தான்.

18

எதிர்வீட்டுக் கதை இழுபறியாக இருந்தது. பெரியவர் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அந்தப் பெண்ணும் தன் கொள்கையில் பின் வாங்குகிற மாதிரி இல்லை; உறுதி யாக நின்றாள்.

அவர்களின் பஞ்சாயத்துக்கு என் வீடுதான் கிடைத் தது. அதைப் பொறுமையாகச் செவி சாய்த்துக் கேட்டேன்.

பெரியவர் தன் கட்சியை எடுத்துக் கூறினார்.

'சாதியைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அவர் கள் தங்கள் தொழிலை மட்டும் விட்டு வர வேண்டும்' என்று வற்புறுத்தினார்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். வங்கியில் நிரந்தரத் தொழில்; நீட்டித்த ஊதியம். இவர்கள் சம்பா திக்க வேண்டும் என்பது இல்லை. என் பெற்றோர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/89&oldid=1114936" இலிருந்து மீள்விக்கப்பட்டது