பக்கம்:குப்பைமேடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


“நல்ல பண்புகள் வளரப் பணம் அடிப்படை. தாராளமாக இருக்க வேண்டுமானால் பணமும் வேண்டும். எந்த ஏழை மற்றவர்களுக்கு உதவுகிறான்? உதவ நினைக்கலாம், ஆனால் அவன் உதவ முடியாது” —என்று மதர்த்துப்போன உண்மைகளைக் கூறுவதும்.

“கடைக்காரர்களிடம் புத்தகங்களைப் போட்டுவிட்டு அசோகவனத்துச் சீதையை மீட்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள்” என்று கூறுவதும், கடன் கொடுத்துவிட்டு சோகமாகிப்போகும் நிலைமைக் காட்டுவதும் நூல் முழுக்க ஆங்காங்கே காணக் கிடக்கின்றன.

“அவர் கண்ணதாசன் — கண்ணனின்தாசன் நான் வாழ்க்கை நேசன்” என்று வாழ்க்கை மீது தனக்குள்ள பற்றுதலை வெளிப்படுத்தியும், Sales girl—இவர்களுக்கு “விளம்பர யாத்திரிகை” என்ற புதுச் சொல்லாக்கம் செய்தும்,

“செருப்புத் தைத்தவன் மகன் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவன் ஆகிறான் என்றும். பிணம் எரித்தவன் மகன் பணம் படைத்தவனாக பவனி வருகிறான் என்றும், குலத் தொழிலை விட்டு நலத்தொழிலை நாடுவது தேவை” என்றும் சாற்றுகிறார்.

மதம்:

“நாடு மதச்சார்பு அற்ற நாடாக இயங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது தவறு, மதச்சார்பு காட்டாத நாடாக இயங்க வேண்டும். என்பதே சரியான கொள்கை” என்றும் திருத்தம் கூறுகிறார்.

"எந்த மதத்தையும் யார் வேண்டுமானாலும் மேற் கொள்ளலாம், என்றாலும் அவை தனித்தனி கலாச்சாரங்களையும், பழக்க வழக்கங்களையும் உண்டாக்கி இருக்கின்றன. ஒரு பள்ளியில் சேர்கிறார்; அந்தப் பள்ளிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/9&oldid=1112373" இலிருந்து மீள்விக்கப்பட்டது