பக்கம்:குப்பைமேடு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

ராசீ

விருப்பத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்; இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்". என்றான் கதாநாயகன்.

'எனக்குத் தொழில் செய்ய உரிமை வேண்டும். நான் தெருப் பெருக்கும் தொழில் செய்யக்கூடாது என்று வற்பு றுத்துகிறார்கள். அது என் உணர்வைத் தொடுவதாக இருக்கிறது. நான் எந்தத் தொழிலையும் சமமாக மதிக் கிறேன். அமைச்சரும் ஒன்றுதான். மூட்டை தூக்கும் நமச்சிவாயமும் ஒன்றுதான். இந்தத் தேசத்தில் வேறுபாடு கள் எவ்வளவு தூரம் வளர்க்க வேண்டுமோ அவ்வளவு தூரம் வளர்த்துவிட்டார்கள். தொழிலால் சாதிப் பாகு பாடு ஏற்பட்டுவிட்டது. கடுமையான உழைப்புக்கு இலக்கானவரைத் தாழ்த்தப்பட்டவர்கள் ஆக்கிவிட்டனர். உழைக்காத சோம்பேறிகளைக் கோயில் குருக்கள் ஆக்கி விட்டனர்.

இவற்றை உடைத்து இந்தச் சமுதாயம் முன்னேறி வருகிறது.

செருப்புத் தைத்தவன் மகன் அறுவைச்சிகிச்சை செய் யும் மருத்துவன் ஆகிறான்; பிணம் எரித்தவன் மகன் பணம் படைத்தவனாகப் பவனி வருகிறான். இதை வர வேற்கிறார்கள். குலத்தொழிலை விட்டு நலத்தொழில் நாடுவது தேவை என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

ஏன்? தொழில்களுள் பேதம் பாராட்டப்படுவதால் இதில் கவுரவங்கள் ஒட்டப்படுகின்றன. செய்யும் தொழி லால் உயர்வு தாழ்வு கற்பிப்பது தவறு. எல்லாத் தொழி லும் சமம்தான். ஏற்கனவே ஏழை பணக்காரன் என்று பேதம் உள்ளது. பணக்காரன் உட்கார்ந்து இருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/90&oldid=1114937" இலிருந்து மீள்விக்கப்பட்டது