பக்கம்:குப்பைமேடு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

89

அவன் கீழ் பணி செய்பவன் நிற்க வேண்டும். அவனைச் சமமாக வைத்துப் பேசும் நாகரிகம் இன்னும் வளர வில்லை.

நான் இதில் வருவாய் குறைவு என்பதை உணர் கிறேன். எனக்கு இதைவிடத் தக்க வேலை கிடைக்கும் என்ற வாதத்தையும் ஒப்புக் கொள்கிறேன்; என்றாலும் எல்லாத் தொழிலும் மதிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்த இந்தத் தொழிலை விரும்பி ஏற் கிறேன் என் மதிப்புக்கு உரிய மாமனாரிடம் ஒர் உறுதி எடுத்து இருக்கிறேன். அவர் மகனை இந்தத் தொழிலில் மணந்து காட்டுகிறேன் என்று கூறி இருக்கிறேன். அது மட்டும் அல்ல என் இதழ்களில் சரியாகச் சாயம் பூசவில்லை என்று கண்டித்தவர் என் பழைய முதலாளி, அதற்காகவே பழைய பணியைத் தவிர்த்தேன். உழைத்துப் பிழைக்க முடியும் என்று காட்ட வெளியேறினேன்' என்று தன் முடிவின் வேகத்தையும் விளக்கினாள். அவள் ஏன் பழைய பயணத்தை முடித்துக் கொண்டாள் என்பதன் காரண மும் விளங்கியது.

-19

எதிர்பாராத விதமாக என் துணைவியாகும் மற் றொரு துணையோடு ஆட்டோவில் வந்து இறங்கினாள். மீட்டருக்கு மேல் அதிகம் கேட்க அவள் பிடிவாதமாக மறுக்க அந்தக் குரல் கேட்டு வெளியே வந்தேன். எனக்குப் புதுமுகம் பார்க்க எழுந்த ஆவல் பஞ்சாயத்தைவிட்டு எழச் செய்தது.

அவன் என்னைப் பார்த்துச் சிரிப்பதுபோல் இருந்தது.

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/91&oldid=1114938" இலிருந்து மீள்விக்கப்பட்டது