பக்கம்:குப்பைமேடு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

ராசீ

வருவதற்கும் சரியாக இருந்தது. அதை அவள் பிரித்துப் பார்க்கவில்லை; அவசியம் இல்லை என்று எடுத்து வைத் தாள். பேச வந்திருக்கும்போது அவர்களை அனுப்பிய பிறகு படிப்பது தக்கது என்று தள்ளி வைத்தாள் எனத் தெரிந்தது. நானும் அதைப்பற்றிய ஆர்வம் காட்ட வில்லை; அவள் சொன்னால் தவிரக் கேட்பதில்லை என்று விட்டு விட்டேன்.

தயாளனின் துணைவியும் அவனோடு அன்று என் இல்லத்திற்கு வந்தாள். அவள் சுறுசுறுப்பும், பரபரப்பும் என்னைக் கவர்ந்தன. அவள் கைகள் சும்மா இருக்க வில்லை. அங்கு அங்குச் சிதறிக் கிடந்த சின்னப் பொருள் களை அடுக்கி வைத்தாள். பெண் வாசம் படாத வீடு என்பதற்கு அடையாளமாக வைக்க வேண்டிய இடத்தில் பொருள்கள் இல்லாமல் வனவாசம் செய்தது.

அதை அவள் அழகாக எடுத்து வைத்தாள். சமையற் காரன் இத்தனை பேர்களுக்கும் சமைக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது. நேரே பழகியவள் போல் அடுக் களைக்குச் சென்று அவளுக்கு உதவியாளராகப் பணிபுரிந் தாள.

குழந்தை தன் படுக்கையை ஈரப்படுத்தி விட்டது. உடனே அதனை அகற்றிப் புதிய மாற்றுப் புடவை கிழிச் சல் கொண்டு வந்து போட்டாள்; பெற்றவள் என் மனை வியா? அவளா? என்ற பேதம் தெரியாதபடி அந்தக் குழந்தையை எடுத்து வாரி அணைத்து முத்தமிட்டாள்.

'அழகாக இருக்கிறது' என்று பாராட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/94&oldid=1114941" இலிருந்து மீள்விக்கப்பட்டது