பக்கம்:குப்பைமேடு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

93

அந்தக் குழந்தை தவழும் அந்த இடம் புதிய ஜீவன் பெற்றது. இதுவரை சலனமற்று இருந்த என் எழுத்து அறை எழிலும் எழுச்சியும் விழிப்பும் பெற்று விளங்கியது. 'மங்கலம் என்ப மனை மாட்சி மற்றதன் நன்கலம் நன் மக்கட் பேறு' என்ற குறளின் விளக்க உரை எனக்குக் கிடைத்தது.

–22

கொண்டு வந்த பஞ்சாயத்து இன்னும் தீராமல் இருந்தது.

'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று எதிர்iட் டுக்காரர் என் கருத்தை எதிர்பார்த்தார். அதாவது நான் சொல்லி அந் நங்கையின் போக்கினைத் திருப்ப முடியும் என்று நினைத்தார்.

இதில் என் அபிப்பிராயம் என்ன இருக்கிறது.

உங்கள் மனமாற்றத்தைப் பொறுத்து இருக்கிறது.

துணிந்து இவர்கள் கொள்கைக்கு இடம் தந்தால் எல்லாம் சரியாகப் போய்விடும்' என்றேன்.

"நாங்கள் கிறித்தவர்கள்; எங்கள் பாதிரிமார்கள் இதற்குச் சம்மதம் அளிக்க மாட்டார்கள். அவர்களைக் கேட்டேன். அவர்கள் ஒரு புதிய நிபந்தனை ஏற்படுத்து கிறார்கள். அவர்கள் எந்தத் தொழில் செய்தாலும் அவர் களுக்குத் தடை இல்லை. கிறித்துவராக மாற முடியுமா? என்ற புதிய பிரச்சினை எழுப்புகிறார்கள்.

ஒரே வீட்டில் இந்துவும், கிறித்தவரும் எப்படி வாழ முடியும். பங்கள் பழக்கவழக்கங்கள் வேறுபட்டவை: அவர்கள் பழக்க வழக்கம் வேறுபட்டவை, நாங்கள் இந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/95&oldid=1114942" இலிருந்து மீள்விக்கப்பட்டது