பக்கம்:குப்பைமேடு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

ராசீ

விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது இல்லை.

அ ைகு மறந்து பழக வேண்டும்.

தத்தம் மன இயல்புகளை மாற்றிக் கொண்டால் அந்தத் தனி மனிதனின் அழகே கெட்டுவிடும். இது அடிமைத் தனமும் ஆகிவிடுகிறது. எனவே இவளுக்காக அவனோ, அவனுக்காக இவளோ மாற வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவை இல்லை.

தன் மகன் இந்துவாக மாறுவதைப் பெரியவர் விரும்ப மாட்டார். அதே மனநிலையைத் தான் மற்றவர்களிடமும் காட்டவேண்டும்; மதம் வேறுபாட்டால் குடும்பம் அமைதி கெடாது. ஒருவரை ஒருவர் மதித்து நடந்தால் எல்லாம் சரியாக இயங்கும்.

அதே போலத்தான் நாட்டிலும் மதச்சார்பு மதிக்கப் பட வேண்டும். சிலர் தவறாகக் கூறுகிறார்கள் இந்த நாடு மதச்சார்பு அற்ற நாடாக இயங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது தவறு; மதச்சார்பு காட்டாத நாடாக இயங்க வேண்டும் என்பதே சரியான கொள்கை.

நிறுவனங்களில் மதச்சார்பு காட்டுதல் தனிச் சலு கைகள் பெறுதல் இவற்றை எல்லாம் நீக்க வேண்டும்.

மத போதனைகளும் தவிர்ப்பது தான் நல்லது. மதச் சார்பு காட்டாத நிறுவனங்களாக மாற வேண்டும். பிற சமயங்களை வெறுக்காத இயக்கங்கள் வளரவேண்டும்.

அந்த வகையில் இந்த மணக்கலப்பு ஒரு வழி காட்டி யாக அமையும். மதத்தால் வேறுபட்டாலும் ஒரே குடும் பத்தில் ஒற்றுமையாக ஒருவரையொருவர் மதித்து வாழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/98&oldid=1114945" இலிருந்து மீள்விக்கப்பட்டது