பக்கம்:குமண வள்ளல்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

குமண வள்ளல்

பெருந்தலைச் சாத்தனார் கண்ணை அவருடைய வறுமை திரைபோட்டு மறைத்தது. இல்லையானால் குமணன் இருந்த நிலை கண்டும் இப்படிச் சொல்லத் துணிவாரா?

குமணன், புலவர் அறியாமையுடையவர் என்று எள்ளி நகைக்கவில்லை. அவருடைய வறுமை அவரை எத்தகைய பாடு படுத்துகிறதென்பதை உணர்ந்தான். ‘இவருக்கு ஒன்றும் கொடுக்க முடியாமல் இருப்பதை விட உயிரையே துறந்துவிடலாம்’ என்றே அவனுக்குத் தோன்றியது.

“புலவர் பெருமானே, உங்கள் நிலையைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். இப்படிச் சொல்வதனால் உங்கள் வறுமை எள்ளளவும் குறையப் போவதில்லை. நான் என்ன செய்வேன்! நாட்டை இழந்தது பெரிய துன்பமாக எனக்குத் தோன்றவில்லை. என்னிடம் ஒரு புலவர் வந்து ஒன்றும் பெறாமல் போவது இருக்கிறதே, அதைக் காட்டிலும் கடுமையான துன்பமே இல்லை. அப்படிச் செல்லுவதைப் பார்த்துக் கொண்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா?” குமணன் சற்றுப் பேச்சை நிறுத்தினான். அவன் உள்ளம் வேதனையினால் சாம்பியது. கண்ணில் நீர் முட்டியது. சற்றே திரும்பித் துடைத்துக்கொண்டான். சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு கனைத்துக் கொண்டான்.

“நான் ஒன்று சொல்கிறேன். அதைத் தாங்கள் செய்தால் நல்ல பயன் கிடைக்கும். என் நாட்டை விட்டு வந்தபோது என் உடம்பையும் உடையையும் உடன்கொண்டு வந்தேன். அந்த உடையோடு இதோ இந்த வாளையும் கொண்டுவந்தேன். இது ஒன்றுதான்