பக்கம்:குமண வள்ளல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாள் தந்த வளம்

97

இப்போது என் கையில் உள்ள பொருள். காட்டுவாழ்க்கையில் பாதுகாப்புக்காக இருக்கட்டும் என்று கொண்டு வந்தேன். இதைத் தருகிறேன். இதைக் கொண்டு நீங்கள் பெரிய ஊதியத்தைப் பெற வழி இருக்கிறது” என்று சொல்லித் தன் உடைவாளை உறையினின்றும் உருவி நீட்டினான்.

“நான் இதைக் கொண்டு போய் என்ன செய்வேன்? இதை விற்றால் என்ன விலை தருவார்கள் என்று எனக்குத் தெரியாதே!” என்றார் புலவர்.

“இதை வாங்கிக்கொள்ளுங்கள். நான் வழி சொல்லுகிறேன். ஆனல் நீங்கள் நான் சொல்லுகிறபடி செய்யவேண்டும். அதனால் உங்களுக்கும் நன்மை உண்டு. எனக்கும் இப்போது இருக்கும் அவலநிலை நீங்கும்.”

குமணன் எதை நினைந்து இப்படிச் சொல்கிறான் என்று புலவருக்கு விளங்கவில்லை. அந்த வாளைக் கையில் வாங்கிக்கொண்டார்.

“என் தம்பி ஒரு வாக்குக் கொடுத்திருக்கிறான். அவன் சொன்னதைச் செய்பவர்களுக்கு நூறாயிரம் பொன் கொடுப்பதாக உறுதி மொழி அளித்திருக்கிறான். நீங்கள் அந்தப் பரிசைப் பெறலாம். அவன் சொன்னபடி செய்வீர்களா?”

பெருந்தலைச் சாத்தனாருக்கு அந்தச் செய்தி தெரியாது. ஆதலால் ஒன்றும் விளங்காமல் விழித்தார்.

“என் தலையைக் கொண்டு வருகிறவருக்கு நூறாயிரம் பொன் தருவதாகச் சொல்லியிருக்கிறான் என் தம்பி. இந்த வாளினால் என் தலையைக் கொய்து சென்று அவனிடம் காட்டுங்கள். உங்களுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/103&oldid=1362784" இலிருந்து மீள்விக்கப்பட்டது