பக்கம்:குமண வள்ளல்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

குமண வள்ளல்

கிடைக்கும் பொன் பல காலத்துக்கு வறுமையைத் தலை காட்டாமல் அடித்துவிடும்.”

“என்ன!” என்று இடி விழுந்தவரைப் போலக் கூவினார் புலவர்.

“உங்களுக்கு இந்தச் செய்தி தெரியாதா? அல்லது இதைச் செய்யக்கூடாது என்று எண்ணுகிறீர்களா? என் நாற்ற உடம்பில் ஒரு பகுதியினால் ஒரு புலவர் சுகப்படப் போகிறார் என்ற திருப்தியோடு நான் உயிர் விடுவேன். ஆதலால், நீங்கள் தயங்கவேண்டாம். நான் சொன்னபடி செய்யுங்கள்.”

புலவருக்குக் கண்ணிலிருந்து நீர் வழிந்தது. “மன்னர் பிரானே, போதும் உங்கள் பரிசுப் பேச்சு, என்னைக் கொலைகாரனாக்குவது கிடக்கட்டும். அப்படி ஒரு கொடுஞ் செயல் நிகழ்ந்தால் கடல் கரையை உடைத்துக்கொண்டு உலகையே விழுங்கிவிடாதா? பூமி வெடித்துப் போகாதா?” அவர் அழத் தொடங்கி விட்டார். குமணனுக்கும் ஒன்றும் தோன்றவில்லை; பேசவும் இயலவில்லை.

சிறிது நேரம் ஆயிற்று. புலவர் நிமிர்ந்தார். அவர் மனத்துக்குள் ஏதோ ஒன்று செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தோற்றியது.

“சரி; இந்த வாளைப் பயன்படுத்திக்கொள்ள எனக்குத் தெரியும். ஆனல் வெறும் வாள் போதாது. அந்த உறையையும் தாருங்கள்” என்று கேட்டார் பெருஞ்சித்திசரனார்.

ஏனென்று கேளாமல் அறத்தின் உருவாகிய அண்ணல் அதை அவிழ்த்து அளித்தான்.

“கடவுள் தங்களைக் காப்பாற்றட்டும். தாங்கள் செய்த தர்மம் தங்கள் தலையைக் காக்கும் என்ற துணி-