பக்கம்:குமண வள்ளல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாள் தந்த வளம்

101

நினைப்பதில்லை. வரிசையாக முன்பு வாழ்ந்த பெரு மக்களை எடுத்துச் சொல்லும்போது அத்தகையவர்களின் பெயர்கள் அவ்வரிசையில் வருவதில்லை.”

“இதற்கும் நீர் சொல்ல வந்ததற்கும் என்ன சம்பந்தம்?”

“சொல்கிறேன், பொறுமையோடு கேட்க வேண்டும். இந்த உண்மையை உணர்ந்து தம்மைப் பாடி வந்தவர்களுக்கு யானை கேட்டாலும் கொடுத்துத் தாம் உள்ளபோதே தம் புகழைப் பரவும்படி செய்தவர் குமண வள்ளல். அவர் காட்டில் இருப்பதை அறிந்து நான் அவர் புகழைப் பாடிச் சென்றேன். அவரிடம் எனக்குக் கொடுக்க ஒன்றும் இல்லை. ஐயோ! நான் நாடு இழந்ததை விட, என்னிடம் வந்த புலவன் ஒன்றும் பெறாமல் வாடிச் செல்வதைப் பார்ப்பது பெரிய துன்பமாக இருக்கிறதே! என்று வருந்தினார். பிறகு இந்த வாளைக் கொடுத்து, இதனால் என் தலையைக் கொய்து, என் தம்பியிடம் ஈந்தால் நிறையப் பொன் கிடைக்கும்” என்று கூறினார். [1]பொன்னைக் கொடுத்தும், பொருளைக் கொடுத்தும், அணியைக் கொடுத்தும், ஆடையைக் கொடுத்தும், குதிரையைக் கொடுத்தும், யானையைக் கொடுத்தும் புகழை மொண்டு கொண்ட அண்ணல் எல்லாவற்றினும் அரியதாகிய தம் உயிரையே கொடுக்க இப்போது முன் வந்தார். அதைக் கண்டபோது என் உள்ளம் உருகிவிட்டது. அவருடன் பிறந்து ஒன்றாக உண்டு ஒன்றாக வாழ்ந்த தங்களுக்கா இந்தக் கல் நெஞ்சம் வந்தது என்று எண்ணிப் பார்த்தேன். அவர் கையில் இந்த வாள் இருந்தால்


  1. புறநானூறு , 165.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/107&oldid=1362796" இலிருந்து மீள்விக்கப்பட்டது