பக்கம்:குமண வள்ளல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

குமண வள்ளல்

“ஏன் அம்மா அப்படிச் சொல்கிறாய்? இறைவனுடைய திருவுள்ளப்படியேதான் எல்லாம் நடக்கும். நீ எதற்காக இப்படி வருத்தப்பட வேண்டும்?” என்று புலவர் மனம் நைந்து கேட்டார்.

“நீ இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுவது எவ்வளவு இன்னலாக இருக்கிறது ! நான் ஒருத்தி வேறு சோற்றுக்குக் கேடாய் இருப்பது ஏன் ? என்னால் யாருக்காவது லாபம் உண்டா ? குழந்தைகள் படும் பாட்டைப் பார்த்துக்கொண்டு நான் இன்னும் வாழ வேண்டுமா ?”

அவள் துயரத்தைப் புலவர் கிளப்பிவிட்டாரே ஒழியக் குறைக்கவில்லை. நாம் ஏன் பேசினோம் என்று ஆகிவிட்டது. பேசாமல் எழுந்து வெளியே சென்றார்.

அவருக்குப் பல குழந்தைகள் இருந்தார்கள். ஒன்று ஆண் குழந்தை ஓடியாடி விளையாடும் பருவம் உள்ள குழந்தை. கைக் குழந்தை ஒன்றும் இருந்தது. மனைவி குழந்தையைப் பெற்ற பச்சை உடம்புடன் காடிக் கஞ்சியை மூடிக் குடித்தாள். கைக் குழந்தைக்குக் கொடுக்க அவளிடம் பால் இல்லை. பால் கிடைக்காமையால் குழந்தை அழுதது. அவள் என்ன செய்வாள், பாவம்! அவள் உடம்புக்கு ஊட்டம் இருந்தால் அல்லவோ குழந்தைக்கு உணவு கிடைக்கும்?

ஏதாவது கிடைத்தால் அதை மற்றவர்களுக்குப் போட்டாள். அவள் எதை உண்டாள்? புழைக்கடையில் குப்பையிலே ஏதோ கீரை முளைத்திருந்தது; அதைப் பறித்து வேகவைத்தாள். அதற்குப் போட உப்புக்கூட வீட்டில் இல்லை. அரிசியைப்பற்றிச் சொல்வானேன்? மோரும் கிடையாது. வெறும் நீரில் வெந்த உப்பில்லாக் கீரையை உண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/16&oldid=1361680" இலிருந்து மீள்விக்கப்பட்டது