பக்கம்:குமண வள்ளல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

குமண வள்ளல்

சுரபுன்னை மரங்களும் மூங்கில்களும் செறிந்திருந்தன. பலா மரங்களுக்குக் கணக்கே இல்லை. நன்றாகக் கனிந்து பழுத்த பழங்கள் அம் மரங்களில் தொங்கின. எங்கே பார்த்தாலும் கம் என்ற வாசனை. பலாப் பழம் இருக்கிற இடத்தில் குரங்குகள் கூட்டங் கூட்டமாக வந்துவிடும். இந்த இடத்திலோ காவலே இல்லை. பலாப் பழம் அருமையான பண்டமாக இருந்தாலல்லவா காவல் வேண்டும்? முதிர மலையில் அதற்குப் பஞ்சமே இல்லை. ஆதலின், ஆண் குரங்குகளாகிய கடுவன்களும் பெண் குரங்குகளாகிய மந்திகளும் குரங்குக் குட்டிகளும் தம் மனம் போன போக்கிலே பலா மரங்களில் தாவிப் பழங்களைத் தோண்டித் தின்றன.

பெருஞ்சித்திரனார் பலா மரச் சூழலில் ஓர் அரிய காட்சியைக் கண்டார். ஓர் ஆண் குரங்கு ஒரு மரத்தில் இருந்தது. அதில் தொங்கிய பெரிய பழமொன்றைத் தோண்டிக் கொஞ்சம் சுவைத்துப் பார்த்த அந்தக் கடுவன் எதிரே வேறு ஒரு மரத்திலிருந்த மந்தியை அழைத்துக்கொண்டிருந்தது. மனிதர்களைப் போலவே கையைக் காட்டித் தன்னுடைய மொழியில் கீச்சிட்டு அழைத்தது.

இதைக் கண்டார் புலவர். ‘இறைவனுடைய படைப்பின் பெருமையே பெருமை! இந்தக் கடுவனுக்கு எத்தனை அன்பு! தான் உண்ணும் கனியை மந்திக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற அறிவுடையதாக இருக்கிறதே! மனிதர்களில் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்? இது எல்லாக் குரங்குகளிடத்திலும் உள்ள இயல்புதானா? அல்லது இந்த முதிர மலையின் சிறப்பாக இருக்குமோ? இதன் தலைவனாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/18&oldid=1361689" இலிருந்து மீள்விக்கப்பட்டது