பக்கம்:குமண வள்ளல்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற் காட்சி

19

பொறாமையால் அவனுடன் பொருதார்கள். வீரம் காட்டி அவனை வெல்வதற்கு அவர்களால் இயல வில்லை. அவனுடைய நெடிய மலையாகிய பறம்பை முற்றுகையிட்டார்கள். அதனல் அவனுக்கு ஒரு தீங்கும் உண்டாகவில்லை. அவனைப்பற்றி நான் பாடியிருக்கிறேன்.”

“அப்படியா! எங்கே, அதைச் சொல்லுங்கள், கேட்கலாம். நல்லோர் பண்பைக் கேட்பதே பெரிய பேறு அல்லவா?”

புலவர் தம் பாடலைச் சொன்னர். அதில் பாரியின் புகழ் வந்தது. பாட்டின் தொடக்கமே அதுதான்.

முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவெள் அருவி கல்அகிலத்து ஒழுகும்
பறம்பிற் கோமான் பாரியும்.[1]

[முரசத்தைக் குறுங்தடி அடிக்கவும், வெள்ளையான சங்குகள் முழங்கவும் முடியரசர் மூவருடன் பொருதவனும், பெருமையும் உயரமும் உடையதும் ஒலிக்கின்ற வெள்ளருவியானது கற்களைப் புரட்டிக்கொண்டு விழுவதற்கு இடமானதுமாகிய பறம்பு மலைக்குத் தலைவனுமாகிய பாரியும்.]

இந்த அடிகளைப் புலவர் சொல்லும்போது குமணன் கூர்ந்து கேட்டான். புலவர் சொல்லி நிறுத்தியவுடன், “பாரியும் என்று பாடியிருக்கிறீர்களே; அவனோடு வேறு சிலரையும் பாடியிருக்கும்


  1. * கடிப்பு - முரசை அடிக்கும் குறுந்தடி இகுப்ப - ஒலிக்கச் செய்ய, வால்வளை - வெண் சங்கு. துவைப்ப முழங்க. பொருத - போர் செய்த, அண்ணல் - பெருமை. நெடுவரை - உயர்ந்த மலை. கறங்கு - ஒலிக்கின்ற. அலைத்து - புரட்டி. பறம்பு - பாரியின் மலை