பக்கம்:குமண வள்ளல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற் காட்சி

25

அவர்கள் யாரிடம் செல்வார்கள்? வள்ளல்கள் போய் விட்டாலும் புலவர்கள் போகவில்லையே! அவர்களில் மாய்பவர்கள் மாயப் புதிய புலவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்கப் புதிய வள்ளல்கள் பிறக்கவேண்டாமா? பலர் பிறக்கவில்லை. ஏழு பேர் போன பிறகு, பாடி வரும் புலவர்களும், பாணர் கூத்தர் ஆகிய பிறரும் வந்து இரப்பார்களே! அவர்களை நான் காப்பாற்றுவேன்' என்று ஒரு. வள்ளல் இக்காலத்தில் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்.”

“அவர் யார் என்று தாங்கள் சொல்ல வில்லையே!”

“நெடுந்துாரத்திலிருக்கும் யான் அவரைப்பற்றிக் கேள்வியுற்றேன். ஏழு வள்ளல்களும் போய் விட்டார்களே என்று வருந்திய எனக்கு, இப்படி ஒரு வள்ளல் இருக்கிறார் என்று கேள்வியுற்றதும், எப்படியாவது அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஊக்கம் உண்டாயிற்று. அதனால் இங்கே விரைந்து வந்தேன்.”

குமணனுக்குப் புலவருடைய கருத்துப் புலப்பட்டு விட்டது. தன்னையே அவர் புகழ்கிறாரென்பதை உணர்ந்துகொண்டான். புன்முறுவல் பூத்தான். புலவர், பாட்டை விட்ட இடத்தில் தொட்டுக்கொண்டு தொடர்ந்து சொன்னார்:

எழுவர் மாய்ந்த பின்றை, அழிவரப்
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு'என, விரைந்துஇவண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/31&oldid=1362520" இலிருந்து மீள்விக்கப்பட்டது