பக்கம்:குமண வள்ளல்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

குமண வள்ளல்'

உள்ளி வந்தனென் யானே.[1]

[ஏழு வள்ளல்கள் மறைந்த பிறகு, “மனத்தில் வறுமையால் வருத்தம் உண்டாக, பாடி வரும் புலவர்களும் பிறரும் கூடி இரந்து வரும் அவர்களுடைய தளர்ச்சியைத் தீர்ப்பேன்” என்று நீ உன் செய்கைகளால் புலப்படுத்த, அதனே உணர்ந்து இங்கே உன்னைக் காண எண்ணி விரைந்து யான் வந்தேன்.)

குமணன் இப்போது ஒன்றும் பேசவில்லை. சான்றோனாகிய அவன் தன் புகழைக் கேட்டு, “நன்றாகச் சொன்னீர்கள்!” என்று பாராட்டுவான? “சான்றோர் புகழும் முன்னர் நாணுப” என்று ஒரு புலவர் சொல்கிறார். தம் புகழைக் கேட்டு நாணம் அடைவதே உயர்ந்தோர் இயல்பு. குமணன், இந்தப் பாட்டுக்கு இத்தனை அடிப்படை போட்டது தன் புகழை அதன் மேல் கட்டுவதற்காக என்பதை உணர்ந்துகொண்டான். அதனால் ஒன்றும் பேசாமல் புன்முறுவல் பூத்தபடியே அதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

மேலே, குமணனுடைய முதிர மலையைப் புலவர் பாடினர். வரும்போது தாம் கண்ட காட்சியை அதில் இணைத்திருந்தார்; பலாப்பழத்தைப் பெற்ற கடுவன் மந்தியைக் கையைக் காட்டி அழைத்த அன்புக் காட்சியைச் சொல்லியிருந்தார்.

...................................................விசும்புறக்
கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று
முட்புற முதுகனி பெற்ற கடுவன்


  1. அழிவர அழிவு உண்டாக; அழிவு - வருத்தம். வருநர் - வரும் புலவர். அற்றம் - தளர்ச்சி. தீர்க்கு - தீர்ப்பேன். என - என்று புலப்படுத்த. உள்ளி - நினைந்து.