பக்கம்:குமண வள்ளல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28.

குமண வள்ளல்



"பாட்டில் அந்த எழுவரோடு என்னையும் சேர்த்து வைத்திருக்கிறீர்களே! அது பொருந்துமா?" என்று கேட்டான் குமணன்.

"பொருந்தும் என்பதை நானும் என்னைப் போன்ற புலவர்களும் நன்கு உணர்வோம்' என்று விடையிறுத்தார் புலவர்.

நெடுநேரம் வள்ளலும் தண்டமிழ்ப் புலவரும் பேசிக்கொண்டிருந்தனர். தமிழ்க்கவிதையின் சுவையை நுட்பமாக உணர்ந்து பாராட்டும் கலைஞன் குமணன் என்பதைப் பெருஞ்சித்திரனார் உணர்ந்துகொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/34&oldid=1388648" இலிருந்து மீள்விக்கப்பட்டது