பக்கம்:குமண வள்ளல்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

குமண வள்ளல்

வளவு நாட்கள் தெரிந்துகொள்ளாமல் இருந்தது பெரும் பிழை. உங்கள் மனைவியார் குடும்பத்தை எப்படித்தான் காப்பாற்றுகிறார்கள்?”

“அவள் உடம்பு பச்சை உடம்பு, சமீபத்தில் தான் குழந்தை ஒன்று பிறந்தது. முன்பும் குழந்தைகள் உண்டு. வீட்டில் ஓர் அரிசி இல்லை. கூழ் காய்ச்சக்கூட வகையில்லை. குப்பைக் கீரையைக் கொய்து உப்பில்லாமலே வேக வைத்து அதைத் தான் உண்டு, கிடைத்த கூழையோ மற்றப் பொருளையோ அந்தக் கிழவிக்கும் எனக்கும் குழந்தைக்கும் போட்டுக் காப்பாற்றுகிறாள்.”

“நான் உடனே உணவுப் பண்டங்களையும் பிறவற்றையும் உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறேன். அவர்களைப்பற்றி இனிமேல் நீங்கள் கவலைப்படவேண்டாம். நீங்கள் இன்னும் சில காலம் இங்கே இருந்து செல்லலாம்” என்று மனம் கசிந்து கூறினான் குமணன்.

“இங்கே எவ்வளவு நாட்கள் இருந்தாலும் மன்னர்பிரான் என்னைப் போகும்படி சொல்லப்போவ தில்லை. ஆயினும் அங்கே நான் சென்று நிற்க, என் தாயும் மனைவியும் என் புதிய நிலை கண்டு உவப்பதை நான் பார்க்க வேண்டாமா?”

“நீங்கள் வந்து சில நாட்களே ஆயின. அதற்குள் போகிறேன் என்று சொல்கிறீர்கள். என் மனம் அதற்கு உடம்படவில்லையே! நீங்கள் வற்புறுத்திப் போகத்தான் வேண்டும் என்றால் மனம் கொள்ளாமல் விடை கொடுக்க வேண்டி வரும்.”

“அப்படி நான் விடை பெற விரும்பவில்லை. மனம் மேவாமல் அரசர்பிரான் யானையைப் பரிசாகக்