பக்கம்:குமண வள்ளல்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரியா விடை

35.

மறுபடியும் அவருக்குத் தம் குடும்பத்தின் நினைவு வந்துவிட்டது. நாள்தோறும் நல்ல சோற்றையும், பல வகைக் கறி முதலியவற்றையும் பல கலங்களில் இட்டு அருத்தினான் குமணன். அவர் உண்டு இன்புற்றாலும் தம் குடும்பத்தின் நிலை அவர் உள்ளத்தை உறுத்திக்கொண்டே இருந்தது.

மறுபடியும் குமணனிடம் விடை கேட்கப் புலவர் துணிந்தார். அவர் அங்கே தங்கிய சில நாட்களில் வேறு சில புலவர்களும் வந்து குமணனுடைய உபசாரத்தைப் பெற்றுச் சென்றார்கள். அவர்களிடம் அவன் அளவுக்கு மிஞ்சிய அன்போடு நடந்துகொள்வதைக் கண்டு கண்டு இன்புற்றார், எப்படியும் விடை பெற்றுச் செல்லவேண்டும் என்று முடிவு செய்துகொண்ட அன்று குமணனிடம் தம் குறிப்பைத் தெரிவிக்கலானார்.

“இங்கே புலவர்கள் பெறும் இன்பம் எவ்வளவு சிறந்ததாக இருக்கிறது. வெயிலால் தீய்ந்துபோன காட்டில் மழை பெய்தால் அக் காடு முழுவதும் பச்சைப் பசேலென்று தழைத்து வளம் பெறுகிறது. அதைப் போன்ற காட்சியைத்தான் இங்கே பார்க்கிறேன்” என்று தொடங்கினர்.

“நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?” என்று குமணன் வினவினான்.

“புலவர்களின் பழைய நிலை எனக்குத் தெரிந்த அளவுக்கு அரசர்பிரானுக்குத் தெரிந்திராது அவர்கள் தின்ன எதுவும் கிடைக்கிறதில்லை; பசி அவர்கள் உடம்பைத் தின்றுகொண்டே வருகிறது. சோறு காணாத குடல் அப்படி அப்படியே மடிப்பு மடிப்பாக இருக்கிறது.அத்தகைய அவர்கள் வயிற்றில் இப்போது தண்ணென்று உணவு புகுகிறது. தாளித்த பலவகைச்