பக்கம்:குமண வள்ளல்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

குமண வள்ளல்

நட்புக் கிடைத்தது எனக்குப் பெருமை. இது மேன் மேலும் வளரும்படி இறைவன் அருள் செய்ய வேண் டும்” என்று கூறி வழியனுப்பினன்.

புலவருக்குப் பேச்சு எழவில்லை. குமணன் கொடுப்பவனைப்போலப் பேசவில்லை. தனக்குப் புலவர் இன்பத்தைக் கொடுத்தார் என்ற எண்ணத்தோடு பேசினான்.

“இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு”

என்று வள்ளுவர் இத்தகைய வள்ளல்களை நினைந்து தான் கூறியிருக்க வேண்டும்.

கண் நீரைக் கக்க, வாய் தடுமாற, ஒருவாறு விடை பெற்றுக்கொண்ட பெருஞ் சித்திரனார் தம் ஊரை நோக்கிப் புறப்பட்டார்.