பக்கம்:குமண வள்ளல்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘எல்லோர்க்கும் கொடு’

49

வைத்துக்கொள்ளாதே. அது வேண்டியதில்லை. இன்னார், இனியார் என்னாமல் கொடு. இவற்றை வைத்துக் கொண்டு சாமர்த்தியமாக வாழலாம் என்று எண்ணாதே. இவற்றை அளித்த குமணன் இருக்கிறான். அவனைக் கொடுக்கும்படி செய்த இறைவன் இருக்கிறான். ஆதலின், கொடுத்தால் குறைந்துவிடுமே என்று எண்ணாமல் கொடு. என்னிடம் யாராவது எதையாவது கேட்டாலும் கொடுக்கிறேன். நீயும் கொடு. நீதானே வீட்டுக்குத் தலைவி? உன்னிடந்தான் எல்லோரும் வந்து கேட்பார்கள். பழங்கள் நிரம்பிய முதிரமலைத் தலைவனகிய குமணன் வழங்கிய இந்தப் பொருள்களை நீ பிறருக்கு வழங்கி அதனால் வரும் இன்பத்தை அடைவாயாக!”

இந்த நீண்ட அறிவுரையைக் கூறிய புலவர் அதைப் பாட்டாகவே அமைத்துவிட்டார்.

நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின் நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னது. நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழி வோயே!
பழம்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் நல்கிய வளனே.

[நின்னை விரும்பி வந்து தங்கும் இயல்புடையவர்களுக்கும், நீ விரும்ப உன் அழைப்பை ஏற்று வந்து தங்குபவர்களுக்கும், பலவாக மாட்சிமைப்பட்ட கற்பையுடைய நின் சுற்றத்தார் முதலியவர்களுக்கும், நம் சுற்றத்தாரின் கடுமையான பசி தீரும் பொருட்டு நினக்குப் பண்டங்களைக் கடன்